கடகம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-09-18 02:00 GMT   |   Update On 2023-09-18 02:01 GMT

18.9.2023 முதல் 24.9.2023 வரை

அதிர்ஷ்ட தேவதை அரவணைக்கும் வாரம்.தனஅதிபதி சூரியன் 5,10-ம் அதிபதி செவ்வாயுடன் சகாய ஸ்தானத்தில் சேர்ந்து நிற்பதால் வியாபாரம் வெற்றி நடை போடும். தொழிலுக்கான கூடுதல் முதலீடைத் திரட்டு வீர்கள். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். பிள்ளைகள் உறவில் ஏற்பட்ட விரிசல்கள் சீராகும். வருமானத்திற்கு ஏற்ற செலவும் ஏற்படும்.குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்து வீர்கள். உங்கள் உடல் தகுதியை பரா மரிக்கக் கூடிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். மாமனார் மூலம் சகாயமான பலன்கள் உண்டு. சிலருக்கு கடன் பிரச்சனை அதி கரிக்க லாம். இந்த காலகட்டத்தில் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு.உங்கள் நேர்மறை மனப் போக்கால் கெட்டவை நல்லதாக மாறும். சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடு படுவீர்கள். மாலை நேரத்தில் லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News