ஆன்மிக களஞ்சியம்

நவகோள்களின் நாயகன்

Published On 2024-02-21 12:29 GMT   |   Update On 2024-02-21 12:29 GMT
  • உஷா மற்றும் பிரதியுஷா (சாயா) தேவிகளுடன் சூரியன் வணங்கப்படுகின்றார்.
  • நமக்கு உணவும், உயிரும் தர தினமும் உதயமாவதாகவும் கருதப்படுகின்றது.

நவகோள்களின் நாயகனாக விளங்குபவவர் சூரியன்.

இவர் ஆதித்யன், பாஸ்கரன், திவாகரன், பாலு, ரவி, பிரபாகரன், பரிதி, கதிரோன், வெய்யோன் என்று பல திருநாமங்களல் அழைக்கப்படுகின்றார்.

உஷா மற்றும் பிரதியுஷா (சாயா) தேவிகளுடன் சூரியன் வணங்கப்படுகின்றார்.

தமிழ் நாட்டிலே பொங்கல் பண்டிகை நல்ல விளைச்சலுக்கு காரணமான சூரிய தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே கொண்டாடப்படுகின்றது.

பெளதீக சாஸ்திரப்படி சூரியன் மஹா கொதி நிலையில் உள்ள வாயுக்கள் நிரம்பிய கோளமாகும்.

நமக்கு உணவும், உயிரும் தர தினமும் உதயமாவதாகவும் கருதப்படுகின்றது.

சூரியன் இல்லையென்றால் தாவரங்கள் என்று சொல்லப்படும் உணவு தயாரிப்பது இல்லை, தாவரங்கள் இலையென்றால் மான், மாடு முதலிய மிருகங்கள் இல்லை.

இம்மிருகங்கள் இல்லை. எனவே சூரிய ஒளியே உலகில் உயிர்களுக்கு ஆதாரம்.

ஆயிரம் கிரணங்களுடன் நம்மை உதய நேரத்தில் பிரம்மா ரூபத்திலும், உச்சிப் போதில் பரமேஸ்வர ரூபத்திலும், அஸ்தமன மாலை நேரத்தில் விஷ்ணு ரூபமாகவும் காப்பதாக ஐதீகம், காலை மற்றும் மாலை சூரியன் கதிரில் விட்டமின் டி இருப்பதாக விஞ்ஞானமும் கூறுகின்றது.

Tags:    

Similar News