ஆன்மிக களஞ்சியம்

மனதைக் கவரும் மோகினி அலங்காரம்

Published On 2023-12-21 12:00 GMT   |   Update On 2023-12-21 12:00 GMT
  • பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாள் தான் இந்த மோகினி அலங்காரம்.
  • மார்கழி தசமியன்று தான் திருப்பாற்கடல் கடையப்பட்டதாக புராணம் சொல்கிறது.

பத்தாம் நாள் மோகினி அலங்காரம்.

அலங்காரம் இல்லாமலேயே அனைவரையும் ஈர்த்தவன் அரங்கத்து மாயன்.

மாயங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு யோக நித்திரை புரியும் பெருமானுக்கு, மோகினி அலங்காரம் என்று தனித்து வேண்டுமா என்ன?

அவனுடைய வசீகரம் இதனாலா கூடிவீடப் போகிறது இல்லை தான்! ஆனால் மோகினி அலங்காரத்தில் பார்த்தால், பக்தியாக இருப்பது பித்தாகவே மாறிவிடக் கூடும். அப்படியொரு பேரழகு!

பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாள் தான் இந்த மோகினி அலங்காரம்.

மார்கழி தசமியன்று தான் திருப்பாற்கடல் கடையப்பட்டதாக புராணம் சொல்கிறது.

அதாவது, துர்வாசரின் சாபத்தால் இந்திரன் தேவலோகத்தை இழந்தான்; சக்தியை இழந்தான்.

திருமாலின் யோசனைப்படி அசுரர்களையும் துணையாக்கிக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர்.

மலை சாயும் நிலையில், ஆமை (கூர்ம) வடிவில் மந்தர மலையைத் தாங்கினார் பெருமாள்.

வாசுகியைக் கயிராகக் கொண்டு தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தனர்.

முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சிவன் ஏற்று திருநீலகண்டரானார்.

அதைத் தொடர்ந்து அமுதம் வெளியிடப்பட்டது.

அதை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர்.

அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தார்.

நினைவூட்டுவது போல மோகினி அலங்காரத்தில் வெளிப்படுகிறார் அரங்கநாதர்.

இப்படி பகல் பத்து நாட்களின் விழாக்கள் நடக்கின்றன.

Tags:    

Similar News