ஆன்மிக களஞ்சியம்

மார்த்தாண்டர் கோவில்

Published On 2024-02-21 11:57 GMT   |   Update On 2024-02-21 11:57 GMT
  • சைவமும், வைணவமும் இந்தியாவில் சிறந்து திகழ்வது போல சூரிய வழிபாடும் திகழ்கிறது.
  • புகழ் வாய்ந்த சூரியன் கோவில்களில் இந்த மார்த்தாண்டர் கோவிலும் ஒன்று.

சைவமும், வைணவமும் இந்தியாவில் சிறந்து திகழ்வது போல சூரிய வழிபாடும் திகழ்கிறது.

சூரியனை முழு முதற்கடவுளாக வணங்கும் வழிபாடு சௌசரம் எனப்படும்.

இந்தியாவின் பல இடங்களில் சூரியனுக்கு பெருங்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

காஷ்மீரத்தில் லலிதா தித்ய முக்தி பாதன் என்ற அரசன் கட்டிய "மார்த்தாண்டர்" கோவில் சூரியனுக்கு கட்டப்பட்டது.

கி.பி.750ல் அதாவது தமிழ்நாட்டில் பல்லவர் ஆண்ட காலத்தில் அது கட்டப்பட்டது.

அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்ததாக வரலாறு கூறுகிறது.

கி.பி.1090ல் அங்கு ஆண்ட கலசன் என்ற அரசன் அங்கு இருந்த சூரிய பகவானுடைய செப்புத்திரு மேனியை உடைத்தான்.

இதனால் அவன் நோய் வாய்ப்பட்டான். பின்னர் தங்கத்தில் சூரியன் உருவம் செய்து இக்கோவிலில் வைத்தான்.

இருந்தாலும் அவன் நோய் வாய்ப்பட்டான்.

ஆதலால் தன்னை இத் தெய்வத்தின் காலடியில் கொண்டுவிட கேட்டுக்கொண்டான்.

கோவிலில் சிலையின் காலடியில் இவனை வைத்ததும் அங்கேயே இறந்து போனான் என்று வரலாறு கூறுகின்றது.

புகழ் வாய்ந்த சூரியன் கோவில்களில் இந்த மார்த்தாண்டர் கோவிலும் ஒன்று.

Tags:    

Similar News