ஆன்மிக களஞ்சியம்

கருணை உள்ளத்தோடு காட்சி தரும் சிறுவாபுரி முருகன்

Published On 2024-05-09 11:54 GMT   |   Update On 2024-05-09 11:54 GMT
  • சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த தலத்தில் முருகன் பிரம்ம சாந்த மூர்த்தி தோற்றத்தில் உள்ளார்.
  • பிரம்மனின் செருக்கை அடக்கி, படைத்தல் தொழிலை மேற்கொள்வதற்காக அடைந்த தோற்றமாகும்.

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள முருகன் திருத்தலங்களில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தனி சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது.

சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடது பக்கம் (மேற்கு) பிரியும் சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் சென்றால் இயற்கை எழில் சூழ்ந்த சிறுவாபுரி என்ற அழகிய கிராமம் வரும்.

சின்னம் பேடு என்று அழைக்கப்படும் இந்த கிராமத்தின் நடுநாயகமாக பால சுப்பிரமணிய சுவாமி கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ளது.

இக்கோவிலின் மூலவர் பாலசுப்பிரமணியர் ஆவார்.

இங்கு முருகர் 4 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் கருணை உள்ளத்தோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த தலத்தில் முருகன் பிரம்ம சாந்த மூர்த்தி தோற்றத்தில் உள்ளார்.

பிரம்மனின் செருக்கை அடக்கி, படைத்தல் தொழிலை மேற்கொள்வதற்காக அடைந்த தோற்றமாகும்.

Tags:    

Similar News