ஆன்மிக களஞ்சியம்

கழுத்தில் மாலையுடன் 6 வாரம் கோவிலை சுற்றினால் திருமணம் உறுதி

Published On 2024-05-09 12:07 GMT   |   Update On 2024-05-09 12:07 GMT
  • சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.
  • பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று திருமணம் நடைபெறும் வரை பாதுகாத்து வணங்கி வர வேண்டும்.

திருமணம் தடை பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்தாலோ, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும்.

நம் பிரார்த்தனை நிறைவேற சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரமும் ஏதாவது ஒரு கிழமையில் (முதல் வாரம் வந்த கிழமையிலேயே தொடர்ந்து அடுத்த 5 வாரமும்) வர வேண்டும்.

வரும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

காலை என்றால் ஒவ்வொரு வாரமும் காலையிலேயே வர வேண்டும்.

மாலை என்றால் ஒவ்வொரு வாரமும் மாலையிலேயே வர வேண்டும்.

திருமணம் ஆகவேண்டிய பெண்கள் ஆறு வாரமும், வாரம் ஒருநாள் என்று ஆறு தடவைகள் தொடர்ந்து வந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால் திருமணம் விரைவில் நடைபெறும்.

திருமணம் ஆக வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திக்க வருபவர்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்களுடன் வந்து மரகத விநாயகர், மூலவர், வள்ளி மணவாளப் பெருமான், அண்ணாமலையார், உண்ணா முலையம்மை, ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

வள்ளி மணவாளப்பெருமான் சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.

பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று திருமணம் நடைபெறும் வரை பாதுகாத்து வணங்கி வர வேண்டும்.

திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராய் இத்தலம் வந்து ஆறு தெய்வ சந்நிதிகளுக்கும் அர்ச்சனை செய்து பழைய மாலையை கோவிலில் உள்ள மரத்தில் கட்ட வேண்டும்.

Tags:    

Similar News