ஆன்மிக களஞ்சியம்

கர்ம வினைக்கு ஏற்ப மாற்றத்தை ஏற்படுத்தும் சூரியன்

Published On 2024-02-21 11:55 GMT   |   Update On 2024-02-21 11:55 GMT
  • சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை.
  • சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு.

சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை.

கர்ம வினைக்குத் தக்கபடி மாற்றத்தை ஏற்படுத்துவான்.

பலவாறான கர்ம வினைகள் எனவே, மாறுபட்ட கிரகங்களின் துணை அவனுக்குத் தேவை.

பூமியில் விளையும் பயிர்கள் பலவிதம், அதற்கு விதையின் தரம் காரணம்.

கண்ணுக்கு இலக்காகாத கர்வினையின் தரத்தை வெளிக் கொண்டு வருபவன் சூரியன்!

ஞாயிற்றுக் கிழமை, சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள்.

விண்வெளியில் சூரியனின் ஓடுபாதை, நடுநாயகமாக விளங்குகிறது.

சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி இப்படி முன்னும் பின்னுமாக இருக்கிற எல்லா கிரகங்களையும், தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தைச் செம்மைப்படுத்துகிறான், சூரியன்.

"ஸ"ம் ஸ ர்யாயநம" என்று சொல்லி 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு.

சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும்.

Tags:    

Similar News