ஆன்மிக களஞ்சியம்

கணவன் மனைவி ஒற்றுமைக்கு

Published On 2024-03-23 11:42 GMT   |   Update On 2024-03-23 11:42 GMT
  • ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உற்சவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது தல புராணம்.
  • பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன் மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாதான்!

ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உற்சவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது தல புராணம்.

அதனால்தான், இந்த விழாவை, ஆதி பிரம்மோத்ஸவம் என்கிறார்கள்.

பங்குனி உத்திர விழாவின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?

பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்!

அது மட்டுமா? ஸ்ரீராமானுஜர், பெருமாளின் திருவடியை அடைவதற்காகத் தேர்வு செய்ததும் இந்தப் புண்ணிய நாளைத் தான்.

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன் மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது.

அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள்.

அதாவது, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல்,

அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் என்னும் தத்துவத்தை விளக்குகிறது இது.

இந்த கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உத்ஸவம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News