ஆன்மிக களஞ்சியம்

பைரவருக்கு பஞ்சதீப வழிபாடு

Published On 2024-04-13 10:54 GMT   |   Update On 2024-04-13 10:54 GMT
  • இதை ஆலயத்தில் மட்டுமே செய்தல் முறை.
  • பஞ்ச பூதங்களும் நவக்கிரஹ நாயகர்களும் பொருள் வேண்டி பூஜை செய்திட வருவதாக ஐதீகம் உண்டு.

தேய்பிறை அஷ்டமி, அமாவாசை அன்று தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய், விளக்கெண்ணெய், இலுப்ப எண்ணெய்

என்ற 5 வகை எண்ணெய்களைக் கலந்து பூசணிக்காயை உடைத்து சரிபாதிகளை உள் சதைப் பகுதியில் சுத்தம் செய்யும்

தேங்காயில் இருமூடிகள், ஒரு எலுமிச்சம் பழ மூடி எடுத்து அவற்றில் ஊற்றி பைரவர் முன் ஏற்றி வைத்து

பைரவர் துதிகள் கூறி ஆத்ம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

இதை ஆலயத்தில் மட்டுமே செய்தல் முறை. தேய்பிறை அஷ்டமியில் அஷ்டலட்சுமிகளும், அஷ்டதிக் பாலகர்களும்,

பஞ்ச பூதங்களும் நவக்கிரஹ நாயகர்களும் பொருள் வேண்டி பூஜை செய்திட வருவதாக ஐதீகம் உண்டு.

இதனால் யோக பைரவரை முறைப்படி யந்திரம் பட ரூபமாக வீட்டில் வழிபட்டு கோவிலில் பஞ்ச தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். 

Tags:    

Similar News