ஆன்மிக களஞ்சியம்

அர்த்தநாரி சூரியன்

Published On 2024-02-21 12:23 GMT   |   Update On 2024-02-21 12:23 GMT
  • கும்பகோணத்துக்கு அருகில் தாராசுரம் என்ற கோவில் இருக்கிறது.
  • நாம் அந்த கோவிலுக்குள் நுழைந்ததும் கண்ணில் படுவது அர்த்தநாரி உருவம்.

கும்பகோணத்துக்கு அருகில் தாராசுரம் என்ற கோவில் இருக்கிறது.

அதை இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி.1165 வாக்கில் கட்டினான்.

அது சாக்த மரபை பிரதிபலிக்கும் கோவிலாகத் திகழ்கிறது.

நாம் அந்த கோவிலுக்குள் நுழைந்ததும் கண்ணில் படுவது அர்த்தநாரி உருவம்.

அதைப் பார்த்ததும் சிவபெருமான் அர்த்தநாரியாகத் திகழ்வதைத் தான் நினைவூட்டும்.

இது என்ன மாயை என்று தோன்றும். ஆனால் அதை ஆராய்ந்த போது ஒரு உண்மை தெரிந்தது.

தாராசுரம் கோவிலில் பல தெய்வச் சிலைகள் உள்ளன. அதில் காவி வண்ணத்தில் அத் தெய்வங்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

சோழர் கால கிரந்த எழுத்துக்களில் இப்பெயர் உள்ளது.

இந்த அர்த்தநாரியின் உருவத்தின் மேலும் எழுத்து மங்கிய நிலையில் இன்றும் உள்ளது.

அதிலிருந்து இது சூரியனுடைய உருவம் என்பதே ஆகும். மூன்று தலைகள் உள்ளன.

தலை யின் பின்புறம் சூரியனுடைய பிரபை வலப்பகுதி ஆணாகவும் இடப் பகுதி பெண்ணாகவும் உள்ளது.

ஒரு வலது கரத்தில் தாமரை உள்ளது.

ஆம் தமிழ்நாட்டிலேயே அர்த்தநாரி சூரியனை சோழர் காலத்தில் சோழ பேரரசர்களும் மக்களும் வணங்கியுள்ளனர்.

சூரியனை இவ்வாறு வணங்கும் மரபு உண்டாம்.

Tags:    

Similar News