செய்திகள்

மாலியில் இருபிரிவினரிடையே மோதல் - 95 பேர் பலி

Published On 2019-06-11 17:05 GMT   |   Update On 2019-06-11 17:05 GMT
மாலி நாட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 95 பேர் பலியாகினர்.
பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் புலானி என்ற விவசாய சமூகத்தினருக்கும், தோகோன் பழங்குடியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 500 பேர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், மாலியின் மோப்தி பிராந்தியத்துக்கு உட்பட்ட சோபனே–கோவ் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவில் துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர் கண்ணில்பட்ட அனைவரையும் சரமாரியாக சுட்டுத்தள்ளினர். இந்த மோதலில் 95 பேர் பலியாகினர்.

தகவலறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று இறந்தவர்களின் பிணங்களை மீட்டனர். மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.

மோதல் நடந்த இடத்தை பார்வையிட்ட மாலி அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்டா, பழிதீர்க்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News