செய்திகள்

பருவநிலை மாறுதல்களுக்கு இந்தியா போன்ற நாடுகளே காரணம்: டிரம்ப்

Published On 2019-06-06 13:03 GMT   |   Update On 2019-06-06 13:03 GMT
உலகின் பருவநிலை மாற்றங்களுக்கு இந்தியா போன்ற நாடுகளே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.
லண்டன்:

மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், லண்டனில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:-

2017 ஆம் ஆண்டு பாரிஸில் நகரில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்றது. அதில் உலக வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு நாடுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் இந்தியா, ரஷியா, சீனா போன்ற நாடுகள் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து எந்தவித முயற்ச்சியும் மேற்கொள்ளவில்லை.

மேலும் அமெரிக்கா உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வதால் அங்கு குடிநீர் மற்றும் காற்று மிகவும் தூய்மையாக உள்ளது. ஆனால் இந்தியா, ரஷியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் தான் குடிநீர், காற்று போன்ற இயற்கை காரணிகள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. 

இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
Tags:    

Similar News