செய்திகள்

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்ற இரு இந்தியர்கள் உயிரிழப்பு

Published On 2019-05-17 13:25 GMT   |   Update On 2019-05-17 13:25 GMT
நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடையச் சென்ற இரு இந்தியர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
காத்மாண்டு:

உலகின் மிக உயர்ந்த மலை சிகரம் என்ற பெருமையை கொண்ட இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை அடைய உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
 
அவ்வகையில், மலையேற்ற குழுவினருடன் நேபாளம் சென்றிருந்த இந்தியாவை சேர்ந்த நாராயண் சிங் என்பவர் மாக்காலு மலைப்பகுதியில் சுமார் 8 ஆயிரத்து மீட்டர் உயரத்தில் இருந்து இறங்கிவரும்போது நேற்றிரவு மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

இதேபோல், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக நேற்று காலை மலையேற்ற குழுவினருடன் புறப்பட்ட இந்தியாவை சேர்ந்த ரவி தாக்கர் என்பவர் தனது கூடாரத்தில் இன்று பிணமாக கிடந்தார்.

மலைப்பாதையில் இருந்து இறங்கி வரும்போது பனிப்பாறையில் கால்பட்டு வழுக்கி விழுந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த சீமஸ் சீன் லாலெஸ் என்பவரின் நிலை என்னவானது? என்று தெரியவில்லை.
Tags:    

Similar News