செய்திகள்

முதலமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு - பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வழிச்சாலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-05-21 15:51 GMT   |   Update On 2019-05-21 15:51 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வழிச்சாலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலை வந்தே தீரும் என்று நேற்று பேட்டியின் போது கூறினார். அவர் கூறும் போது போக்குவரத்து அதிகமாக உள்ளதால் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் அவசியம் தேவை. இதற்காக சேலம்-சென்னை 8 வழி சாலை வந்தே தீரும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து முதலமைச்சரின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் புதுப்பட்டி கிராமத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்புக் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் கூறுகையில், எங்கள் உயிர் போனாலும் விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்பு ஒரு சொல்லும், தேர்தலுக்கு பின்பு ஒரு சொல்லும் மாறி, மாறி பேசுகின்றனர். எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News