செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் அமித் ஷா

Published On 2019-05-29 09:23 GMT   |   Update On 2019-05-29 09:23 GMT
பாஜக தலைவர் அமித் ஷா, ரவி சங்கர் பிரசாத், கனிமொழி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைவர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதேபோல் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியிலும், திமுகவைச் சேர்ந்த கனிமொழி தமிழகத்தின் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

அவர்கள் மூவரும் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தனர். தற்போது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



இதேபோல் தமிழகத்தின் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News