செய்திகள்

மா.கம்யூனிஸ்ட் தொண்டர் கொலையில் 5 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை

Published On 2019-05-22 15:03 GMT   |   Update On 2019-05-22 15:03 GMT
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் கொலையில் 5 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு தலச்சேரி நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்தது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், தலச்சேரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த யாகூப் என்பவரை கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசியும், பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் படுகொலை செய்தது.

இதுதொடர்பாக, பலரை கைது செய்து விசாரித்த போலீசார் தலச்சேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 16 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆர்.எல்.பைஜூ, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஷங்கரன் மாஸ்டர்(48), அவரது சகோதரர் மனோகரன்(42), விஜேஷ்(38), பிரகாஷன்(48), காவ்யேஷ்(40) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா 50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.



ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் வல்சன் தில்லேன்கேரி உள்பட இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேர் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யப்பட்டனர்.தொண்டர் கொலையில் 5 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்தது.
Tags:    

Similar News