செய்திகள்

ஆதாருடன் டிரைவிங் லைசென்ஸ் இணைப்பு - புதிய சட்டம் வருகிறது

Published On 2019-01-07 07:53 GMT   |   Update On 2019-01-07 07:53 GMT
விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தையும் இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. #Aadhaar #Drivinglicence
பக்வாரா:

106-வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:-

ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தையும் (லைசென்ஸ்) இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.

தற்போது விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து மாற்று லைசென்சையும் அவர்கள் பெற்று விடுகிறார்கள். இதனால் தண்டனையில் இருந்து எளிதில் தப்பி விடுகிறார்கள்.

இந்த மோசடிகளை தடுக்க ஆதார் எண்ணுடன், டிரைவிங் லைசென்ஸ் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.



சம்பந்தப்பட்ட நபர் பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அவரது விரல் ரேகை, கண் கருவிழி பதிவுகள் உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது. புதிய உரிமம் பெறும்போது கம்ப்யூட்டர் எச்சரிக்கும். எனவே ஆதார்-லைசென்ஸ் உரிமம் இணைப்பு அவசியமாகும்.

இதுவரை 127 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வந்து திறம்பட செயலாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். #Aadhaar #Drivinglicence

Tags:    

Similar News