செய்திகள்

தேர்தல் தோல்வி: தினகரன் 1-ந் தேதி ஆலோசனை

Published On 2019-05-26 10:36 GMT   |   Update On 2019-05-26 10:36 GMT
தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை:

தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்தது.

அ.தி.மு.க. வாக்கு வங்கியை அ.ம.மு.க. பிரித்து நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அ.ம.மு.க. வால் எந்த நெருக்கடியும் கொடுக்க முடியவில்லை. அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டுகளை இழுந்தனர்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் சாதிக்க வேண்டும் என்று அ.ம.மு.க.வின் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் வருகிற ஜூன் 1-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் கட்சி தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News