செய்திகள்

பெரம்பலூர் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Published On 2019-06-07 16:20 GMT   |   Update On 2019-06-07 16:20 GMT
பெரம்பலூர் அருகே நடக்க இருந்த 2 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது சிறுமி ஒருவருக்கும், அவரது உறவினரான 37 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. 

இதேபோல் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது சிறுமிக்கும், அவரது உறவினரான 27 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. 

இதுகுறித்த ரகசிய தகவல் சைல்ட் லைன் இலவச தொலைபேசி அழைப்பு எண் 1098 மூலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு தெரியவந்தது. உடனே சமூக நலத்துறை அலுவலர்கள், மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தைகள் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து சமூக நலத்துறை அலுவலர்கள் 17 வயதே ஆன இரு சிறுமிகளையும் மீட்டு பெரம்பலூரில் உள்ள குழந்தை நல குழுவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமிகளின் பெற்றோரை சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News