செய்திகள்

இலவச கழிப்பிட விவகாரம்- டெல்லியில் உள்ள நடைமுறையை தமிழகத்தில் பின்பற்ற உத்தரவு

Published On 2019-04-25 10:49 GMT   |   Update On 2019-04-25 10:49 GMT
கட்டணமில்லா கழிப்பிட விவகாரத்தில் டெல்லியில் உள்ள நடைமுறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #MaduraiHCBench #FreeToilet
மதுரை:

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரவணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ‘தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி சுகாதாரமாக இல்லை. டெல்லி, திருப்பதி போன்ற நகரங்களில் உயர்தரத்துடன் இலவச கழிப்பறைகள் உள்ளன. அதேபோன்று தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்க உத்தரவிடவேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கட்டணமில்லா கழிப்பிட விவகாரத்தில் டெல்லியில் உள்ள நடைமுறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“டெல்லியில் உள்ள பொது கழிப்பிடங்கள் சுத்தமாக உள்ளன, கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பொது கழிப்பிடங்களில் தனியார் விளம்பரம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை, கழிப்பிட மேம்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள். அதே நடைமுறையை தமிழகத்தில் பின்பற்றலாம்.

ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து, டெல்லி சென்று அங்குள்ள இலவச கழிப்பிடங்களை ஆய்வு செய்து, அதனை தமிழகத்தில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். #MaduraiHCBench
Tags:    

Similar News