செய்திகள்

பாகிஸ்தான் பற்றி மோடி பேசுவதைக் கேட்டு சோர்வடைந்துவிட்டோம்- ப.சிதம்பரம்

Published On 2019-04-24 04:51 GMT   |   Update On 2019-04-24 04:51 GMT
பாகிஸ்தான் பற்றி மோடி பேசுவதைக் கேட்டு சோர்வடைந்துவிட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Modi #Chidambaram #HateSpeeches
சென்னை:

பாராளுமன்றத் தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மோடியின் பிரசாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவதைக் கேட்டு சோர்வடைந்துவிட்டோம். தேர்தல் பிரசாரம் முடிவதற்கு முன்பாவது, பிரதமர் மோடி முக்கியமான மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவாரா?

நாட்டில் இப்போது வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை மற்றும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சினைகள். இந்த பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசாமல் அமைதியாக இருப்பது ஏன்?



ரூபாய் நோட்டு விவகாரம், குழப்பம் நிறைந்த ஜிஎஸ்டி, சிறு குறு தொழில்களின் அவலநிலை குறித்து, பிரதமர் மோடி பேச வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சுக்கள், குறிப்பாக பாஜகவைச் சேர்ந்தவர்களின் வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்பாக பிரதமர் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார். #Modi #Chidambaram #HateSpeeches

Tags:    

Similar News