செய்திகள்

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.934 கோடிக்கு மது விற்பனை

Published On 2019-01-03 10:26 GMT   |   Update On 2019-01-03 10:26 GMT
குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.934 கோடியே 1 லட்சத்து 8 ஆயிரத்து 104-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

நாள் ஒன்றுக்கு 2½ கோடி முதல் 2¾ கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வருகின்றன. பண்டிகை காலங்களில் மதுபானங்களின் விற்பனை அளவு அதிகமாக இருக்கும். புத்தாண்டையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.9 கோடியே 89 லட்சத்து 645-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளன.

2018-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஓராண்டில் ரூ.934 கோடியே 1 லட்சத்து 8 ஆயிரத்து 104-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது. டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.83 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 885-க்கு மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன.

பிப்ரவரி மாதத்தில் குறைந்தபட்சமாக ரூ.71 கோடியே 58 லட்சத்து 23 ஆயிரத்து 915-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது. ஜனவரி மாதத்தில் ரூ.76 கோடியே 17 லட்சத்து 30 ஆயிரத்து 745-க்கு, மார்ச் மாதத்தில் ரூ.77 கோடியே 90 லட்சத்து 31 ஆயிரத்து 644-க்கும், ஏப்ரல் மாதத்தில் ரூ.81 கோடியே 52 லட்சத்து 67 ஆயிரத்து 355-க்கும் மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் ரூ.79 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரத்து 825-க்கும், ஜூன் மாதத்தில் ரூ.78 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 590-க்கும், ஜூலை மாதத்தில் ரூ.79 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரத்து 625-க்கும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.76கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 960-க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ரூ.79 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்து 355-க்கும், அக்டோபர் மாதத்தில் ரூ.76 கோடியே 11 லட்சத்து 19 ஆயிரத்து 970-க்கும், நவம்பர் மாதத்தில் ரூ.74 கோடியே 99 லட்சத்து 5 ஆயிரத்து 205-க்கும் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News