லைஃப்ஸ்டைல்

மனைவியிடம் கணவன் கேட்க கூடாத விஷயங்கள்

Published On 2019-02-21 08:22 GMT   |   Update On 2019-02-21 08:22 GMT
மனைவியிடம் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் இருப்பதற்கு எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த விஷயங்களை கேட்கவே கூடாது...
மனைவியிடம் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு, எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த விஷயங்களை கேட்கவே கூடாது...

சைலன்ஸ் என்பது இருமுனை கத்தி போல. சில சமயம் பல சண்டைகள் உண்டாகாமல் தடுக்க காரணமும் சைலன்ஸ் தான். பல சமயம் சண்டைகள் பெரிதாக காரணமாக இருப்பதும் சைலன்ஸ் தான்.

பெண்கள் வெளியே செல்லும் வேலைகளில் ரெடியாக சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வார்கள். எனவே, அவர்கள் ரெடியாகிக் கொண்டிருக்கும் போது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சென்று முடிஞ்சதா? இன்னுமா ரெடி ஆகுற? லேட் ஆகுது என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். காரணம், நீங்கள் கேள்வி, கேட்க, கேட்க பெண்கள் ரெடியாகும் நேரம் மட்டுமல்ல, உங்கள் மீதான க்ரைம் ரெட் கூடிக் கொண்டே போகும்.

முடிந்த வரை உங்கள் துணையின் அந்த மூன்று நாட்கள் மாதத்தின் எந்த நாளில் வர சாத்தியம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் புருஷ லட்சணம் தான். அல்லது, சென்ற மாதத்தில் உங்கள் மனைவிக்கு எந்த நாளில் பீரியட் ஸ்டார்ட் ஆனது என்பதையாவது மறக்காமல் இருக்க வேண்டும். சிலசமயம் அவர்களே இதை மறக்க வாய்ப்பிருக்கிறது. இது எதுவும் தெரிந்துக் வைத்துக் கொள்ளாமல், திடீரென ஒரு நாள் சென்று அந்த நாள் குறித்த குழப்பமான கேள்விகள் கேட்டால்... நிச்சயம் ஒரு ருத்ரதாண்டவதை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம்.



எக்காரணம் கொண்டும்... தெரிந்தோ தெரியாமலோ மற்றொரு பெண்ணின் உடல் வாகினை பற்றி புகழ்ந்து பேசுவதோ, விமர்சிப்பதோ வேண்டாம். அது வேறு பெண்களாக தான் இருக்க வேண்டும் என்றில்லை... உங்கள் துணையின் தோழி, சகோதரி என யாராக இருந்தாலும் சரி... அதனால் வெளிப்படும் கோபம், தாக்கம், விளைவுகள் ஒரே மாதிரியானதாக தான் இருக்கும்.

உங்கள் துணைக்கு பிடித்த உணவு உங்களுக்கு பிடிக்காது என்றாலோ, அல்லது அவர் சாப்பிட போகும் உணவில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது..., அது அதிகம் சாப்பிட்டால் அது வரும், என்று அவர்கள் ஆசையாக சாப்பிட செல்லும் போது சொல்ல வேண்டாம். சாப்பிட்டு முடித்த பின்னர் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை எடுத்துக் கூறுங்கள்.

சில சமயம் ஆண்களிடம் வெளிப்படும் கெட்ட பழக்கமே ஒப்பிடுவது தான். ஏதாவது ஆசையாக சமைத்து கொண்டு வந்து கொடுத்தால் நன்றி கூறி சாப்பிட்டு விடுங்கள். அதைவிட்டு... என் அத்தை பொண்ணு நல்லா பண்ணுவா... அம்மா சூப்பரா சமைப்பாங்க... அந்த பிரெண்ட் இதுல எக்ஸ்பர்ட் என்றெல்லாம் வேறு யாருடனாவது ஒப்பீடு செய்தால்.. நாளப்பின்ன உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. ஒருசில நாள் இரவும் பட்டினி போடப்படலாம்.

கணவன் - மனைவி உறவுல நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கும். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு தவறு தான். ஆனா, சின்ன சின்ன எதிர்பார்ப்புகள கூட, இதெல்லாம் நீயே பண்ணிக்க மாட்டியா என்று தட்டி கழிப்பது... அதைவிட பெரும் தவறு. பிறகு எதற்கு காதலன் - காதலி ; கணவன் - மனைவி என்ற உறவு. உண்மையில் நமது உறவினை இணைத்து வைத்திருக்கும் பாலத்தின் ஆரோக்கியம் இந்த சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தான் அடங்கி இருக்கிறது. இதை நாம் செய்ய மறந்துவிட்டால், தவறிவிட்டால்.. அந்த பாலத்தில் நிச்சயம் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு.
Tags:    

Similar News