லைஃப்ஸ்டைல்

பதட்டத்திற்கான காரணங்களும் - தீர்வும்

Published On 2018-04-15 07:45 GMT   |   Update On 2018-04-15 07:45 GMT
பதட்டம் ஒரு வகையான மனநிலை பாதிப்பு என்பதனை உணரத் தவறி விடுகின்றோம். இந்த பதட்டம் ஒருவருக்குத் தொடரும் பொழுது கீழ்கண்ட உண்மைகளே இதற்குக் காரணம் என்று அறியலாம்.

பதட்டம் என்பது சர்வ சாதாரணமாக அநேகரிடம் காணப்படும் ஒன்று. ‘அவர் எதற்கெடுத்தாலும் ரொம்ப பதட்டப்படுவார்’ என்று சொல்லி விட்டு விடுவோமே தவிர இது ஒரு வகையான மனநிலை பாதிப்பு என்பதனை உணரத் தவறி விடுகின்றோம். இந்த பதட்டம் ஒருவருக்குத் தொடரும் பொழுது கீழ்கண்ட உண்மைகளே இதற்குக் காரணம் என்று அறியலாம்.

* மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்
* பரம்பரை
* வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள் ஆகியவை ஆகும்.

படபடப்பு என்பது நடக்காத ஒன்று நடந்து விடுமோ என்ற பீதியில் ஏற்படும் வெளிப்பாடு ஆகும். இதன் அறிகுறிகளாக

* வேகமான இருதய துடிப்பு
* நெஞ்சு வலி (அ) வயிற்று வலி
* மூச்சு விடுவதில் சிரமம்
* தளர்ச்சி
* வியர்த்து கொட்டுதல்
* அதிக சூடு (அ) அதிக சில்லிப்பு
* கைகளில் குறுகுறுப்பு உணர்வு
* நடுக்கம்

ஆகியவை பாதிப்பு உள்ளவரிடம் இருக்கும். இத்தகைய பாதிப்பு உடையவர்களுக்கு அவர்களின் பாதிப்பிற்கான நிகழ்வுகள் என்ன என்று தெரியும். அதனை சீர் செய்தாலே முன்னேற்றம் கிடைக்கும்.

செரடோனின் என்ற ரசாயனம் மூளை, உணவுக்குழாய் இவற்றில் உருவாகுவது. இதனை மகிழ்ச்சி ஹார்மோன் என்று குறிப்பிடுவர். மன அமைதி, நலமாய் இருக்கும் உணர்வினை அளித்தல் ஆகியவை இந்த செரடோனின் மட்டுமே அளிக்க முடியும். பழங்கள், காய்கறிகள், விதைகள் இவைகளை நன்கு எடுத்துக் கொள்வதன் மூலம் செரடோனின் உற்பத்தி நன்கு இருக்கும். கூடவே வைட்டமின் பி6, இரும்பு சத்தும் செரடோனின் உற்பத்திக்கு பெரிதும் உதவும்.

* காலிபிளவர், * சீஸ், * சியா விதை, * வெள்ளரி, * முட்டை, * மீன், * கீரை, * காளான், * ஓட்ஸ், * அன்னாசி பழம், * பிஸ்தா, * உருளை, * பூசணி, பூசணி விதை, * எள், * சர்க்கரை வள்ளி கிழங்கு, * தக்காளி, * வெது வெதுப்பான பால்.

மற்றும் வைட்டமின் சி, மக்னீசியம், டிரிப்டோபேன் இவைகள் செரடோனின் உற்பத்திக்கு பெரிதும் உதவும். மேலும்

* பருப்பு வகைகள், * பட்டாணி, * பீன்ஸ், * உலர் திராட்சை போன்றவைகளையும் சேர்த்து உண்ண பழகும் பொழுதும் உங்களது செரடோனின் அளவு சீராக இருக்கும் என்பதால் படபடப்பு, பீதி போன்ற பாதிப்புகள் வெகுவாய் குறையும். 
Tags:    

Similar News