ஆன்மிகம்

பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

Published On 2019-05-29 05:39 GMT   |   Update On 2019-05-29 05:39 GMT
கொடைக்கானல் நகர் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
கொடைக்கானல் நகர் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் சார்பில் மண்டகப்படிகள் நடைபெற்றது. அத்துடன் திருக்கல்யாணம், மலர்வழிபாடு விழா, ஊஞ்சல் உற்சவம், பூச்சொரிதல் நடந்தது.

மேலும் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News