search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சூரியன் மற்ற ராசிகளுடன் சேரும்போது.....
    X

    சூரியன் மற்ற ராசிகளுடன் சேரும்போது.....

    • சந்திரனுடன் இணைந்தால், மனத் தெளிவை ஏற்படுத்துவான்.
    • சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான்.

    சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான்.

    அதனை நிபுணயோகம் எனப் பெருமைபடத் தெரிவிக்கிறது ஜோதிடம்.

    ஆனால் அவனுடன் முற்றிலும் ஒன்றினால், விபரீத பலனைத் தந்து, துயரத்தைச் சந்திக்க நேரிடும்.

    குருவுடன் சேரும் போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வான்.

    செவ்வாயுடன் இணையும் போது, உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம்.

    சந்திரனுடன் இணைந்தால், மனத் தெளிவை ஏற்படுத்துவான்.

    சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்தியத்தை இழக்க நேரிடும், சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டு, செல்வ வளம் பெற்றாலும், செல் லாக்காசாக மாற நேரிடும்.

    ராகுவுடன் சேர்ந்தால் வீண்பழி, அவப் பெயர்தான் மிஞ்சும். பலவீனமான மேகம், சில தருணங்களில் சூரியனின் ஒளிபரவாமல் தடுப்பது உண்டு. அதே போல், ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு.

    கேதுவுடன் சேர்ந்தால், வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும்.

    வசதி உலகவியலில் அடங்கும், சுகம், மனம் சார்ந்த விஷயம், ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்க வைப்பான்.

    உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால், செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றி விடுவான்.

    அவனது தனித்தன்மையை அழியாமல் காப்பாற்றுவான்.

    நீசம், சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து, விழுந்து வேலை செய்தாலும், தகுதி இருந்தும் சிறக்க முடியாது போகும்! சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது.

    பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும், தன்னம்பிக்கை பிறக்கும்,

    மக்கள் சேவையுடன் திகழலாம், புகழுடன் வாழலாம்!

    ஆன்ம காரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணைபுரியும், சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அதனால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்து விடலாம்.

    Next Story
    ×