என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பசு தரும் நன்மைகள்
    X

    பசு தரும் நன்மைகள்

    • வெண்ணை பசும் பாலிருந்து எடுக்கப்படும் இப்பொருள் உடல் அழகுக்கும் புரதச்சத்து மிகுந்திடவும் பயனாகிறது.
    • வரட்டி என்பது கணபதி ஹோமம், முதலிய யாகங்களுக்காகப் பயன்படுகிறது.

    ஆரோக்கியமுள்ள ஒரு பசுவை வீட்டில் வளர்ப்பதால் அறிவுள்ள மருத்துவரை வீட்டில் கூடவே வைத்திருப்பதற்குச் சமம் என்று சொல்வார்கள்.

    பசு தரும் பால், தயிர், நெய், கோராஜனை, பாலாடை, வெண்ணை கோமயம், கோஜலம் (சிறுநீர்) தோல், வரட்டி,

    முடிகள், பரிகார பூஜை (குளம்படி பூஜை)க்கான குளம்புகள் ஸ்டிபம் போட கொம்பு ஆகியன மனித சமுதாயத்திற்கு நல்ல பயன்களைத் தருகின்றன.

    தயிர்: துருவருக்கு இடுமருந்து என்ற அழிக்கும் மருந்து வைக்கப்பட்டிருந்தால் ஐந்து திங்கட்கிழமைகள் அகண்ட

    வில்வ இலையுடன் தாளித்துக்காலை வெறும் வயிற்றில் உண்டால் இடுமருந்து அகன்று உடல்நலம் தேறும்,

    தெய்வ அபிஷேகங்கள், நோய்க்கு சீதனத்திற்கு என தயிர் ஆதாரப் பொருளாக உள்ளது. சித்த மருந்துகளுக்குத் தயிர் ஒரு மூலப்பொருள்.

    நெய்: அன்னம் அபான வாயு, நெய் கேந்திர வாயு, மோர் மூலச்சூடு தயிர் தணிக்கும் சூடு என்றார்கள் முன்னோர்கள்.

    இவற்றை எல்லாம் தீர்க்கும் சக்தி கொண்டவை எனப்பட்டன. நெய் குளிகை செய்ய மாத்திரை செய்ய, கலப்பு மருந்து செய்ய பயன்படுகிறது.

    சுத்தமான பசு நெய்யை வட நூலார் கோக்ருதம், சர்ப்பி, ஆஜ்யம் என்று குறிப்பிட்டனர். யாகங்களுக்கு நெய்யே முக்கிய பொருளாக உள்ளது..

    கோரோஜனை: குழந்தைகளுக்கு சளி, கக்குவான் இருமல், நாள்பட்ட காய்ச்சல் தீர கோரோஜனைய பாரில் இட்டு தருவர்.

    இதுவும் பசுவிடமிருந்து எடுக்கப்படுகிறது. காராம் பசுவின் கோரோஜனை விலை உயர்ந்த பொருளாக கருதப்படுகிறது.

    பாலாடை: இக்கால பிஸ்கட்டுகள், உணவு வகைகளுக்குப் பாலாடை அழகு தரும் பொருளாகவும், முக அழகுக்குப் பூசும் பொருளாகவும் பயன்படுகிறது.

    வெண்ணை பசும் பாலிருந்து எடுக்கப்படும் இப்பொருள் உடல் அழகுக்கும் புரதச்சத்து மிகுந்திடவும் பயனாகிறது.

    பூஜை காலங்களில் சாப்பிடல், வெண்ணைத்தாழி உற்சவம், வெண்ணைக் கோல வழிபாடு ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.

    கோமியம்: பசுவின் சானத்திற்குப் பெயரே கோமியம். இது ஒரு சிறந்த கிருமிநாசனி.

    கும்பாபிஷேகம், யாக கர்மங்கள் செய்ய ஸ்தல சுத்திக்காக தெளிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், சித்தா துறைகளில் நீர்மருந்து செய்ய இது ஆதாரப் பொருள்.

    தோல் அமர்வதற்கும், டிரம், பறைகள் செய்ய ஆசனம் செய்ய பயன்படுகிறது.

    வரட்டி என்பது கணபதி ஹோமம், முதலிய யாகங்களுக்காகப் பயன்படுகிறது.

    பஸ்மம் என்கிற சுத்தமான விபூதி பசு சாணத்தைச் சுட்டுதான் தயார் செய்கின்றனர்.

    முடிகளை சில அம்மன் சன்னிதானங்களில் சவரியாகப் பயன்படுத்துகின்றனர்.

    குளம்புகள்: பசுவின் கால் குளம்புகளை சீவி தோஷங்களை விலக்கும் மணிகளாகப் பயன்படுத்தி வந்தனர்.

    பசுவின் இரு கொம்புகளும், மை அடக்க உயிர் காக்கும் மருந்துகளையும் புடம் போட்டு பதப்படுத்தப் பயன்பட்டன.

    இக்காலங்களில் அதற்கு ஈடான பிளாஸ்டிக் பொருட்களே பயன்பாட்டில் உள்ளன.

    இவ்வாறாக பசுவின் உடல் பாகம் அனைத்துமே மனித இனத்துக்குப் பயன் தருவதாக உள்ளன.

    Next Story
    ×