search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கர்மமே கண்ணாக இருக்கும் சூரியன்
    X

    கர்மமே கண்ணாக இருக்கும் சூரியன்

    • நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன.
    • எதிர்காலத்திலும் தொடருவான். ஆக முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி.

    ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சூரியனைப் பார்த்து, கர்மமே கண்ணாக இருக்க வேண்டும் என்கிறது வேதம்.

    இருண்ட சந்திரனுக்கு ஒளியை வழங்குபவன் சூரியன்.

    நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன.

    ஒளியை வெளியிடும் அனைத்துப் பொருட்களும் சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்றவையே.

    இருளில் ஒளிந்திருக்கிற பொருளை அடையாளம் காட்டுகிறது வெளிச்சம்.

    ஒளிந்திருக்கிற கர்ம வினையை அடையாளம் காட்டுகிறது, இவனுடைய வெளிச்சம்.

    மற்ற கிரகங்களும் இவனுக்குத் துணை போகின்றன. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்தும் சூரியனை வைத்தே நிகழ்கின்றன.

    அதாவது, முற்பிறவியில் நம் செயல்பாட்டைக் கண்காணித்தவன் அவன். இந்தப் பிறவியிலும் அதனைத் தொடர்கிறான்,

    எதிர்காலத்திலும் தொடருவான். ஆக முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி.

    "முக்காலத்திலும் நிகழ்கிற பலன்களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள்" என வராகமிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார்.

    நம் உடலில் உள்ள சூடு, அவனுடைய பங்கு.

    அவனுடைய வெப்பம், பொருளில் அதன் இயல்பை வெளிக்கொண்டு வர உதவும்.

    Next Story
    ×