search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அன்றாட வாழ்வில் சூரியன்
    X

    அன்றாட வாழ்வில் சூரியன்

    • தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவந்தால், கண் ஆஸ் பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது
    • அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம்.

    தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவந்தால், கண் ஆஸ் பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது.

    பூதவுடலை, பெரும்பூதங்களுடன் இணைக்கும் போது, கண்கள் சூரியனில் இணையட்டும் என்கிறது வேதம்.

    தோற்றம் மறைவு இல்லாதவன் சூரியன்.

    ஒளிப் பிழம்பாகத் தோன்றுபவன் அவன். நம் கண்களுக்குத் தென்படுகிற போது, "சூரியன் தோன்றுகிறான்" என்கிறோம்.

    தென்படாத போது, "சூரியன் மறைந்து விட்டான்" என்கிறோம்.

    ஆனால், அப்போது சூரியன் வெளிநாட்டில் தோன்றுகிறான்.

    சூரியன் தோன்றி மறைகிற இடைவெளியை பகலாக ஏற்கிறோம்.

    அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம்.

    நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகியவை அனைத்தும் சூரியனை வைத்துத் தீர்மானிக்கப்பட்டவையே.

    சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை.

    கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்.

    அதாவது வேளை என்கிறது வேதம்.

    சூரியனின் செயல்பாட்டின் அளவே கால அளவாக மாறியது.

    Next Story
    ×