search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் சலுகை அறிவிப்பு
    X

    வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் சலுகை அறிவிப்பு

    வோடபோன் நிறுவனம் தனது ரெட் போஸ்ட்பெயிட் சேவையை பயன்படுத்துவோருக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.



    வோடபோன் ஐடியா நிறுவனம் புதிதாக வோடபோன் ரெட் டுகெதர் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகைக்கான கட்டணம் ரூ.999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய வோடபோன் ரெட் டுகெதர் சேவையை தேர்வு செய்வோர் ஐந்து இணைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு இணைப்புக்கான கட்டணம் ரூ.200 மட்டும் தான். புதிய சலுகையுடன் பயனர்களுக்கு அமேசான் பிரைம், வோடபோன் பிளே, மொபைல் ஷீல்டு, ஒற்றை பில் மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது.



    வோடபோன் ரெட் டுகெதர் பலன்கள்

    - ஒரு இணைப்புக்கு 30 ஜி.பி. டேட்டா, அதிகபட்சம் 50 ஜி.பி. டேட்டாவினை ரோல்-ஓவர் செய்து கொள்ளும் வசதியும், குடும்ப தலைவருக்கு 80 ஜி.பி. டேட்டாவும், அதிகபட்சம் 200 ஜி.பி. ரோல்-ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது.

    - ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    - வோடபோன் பிளே சந்தா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் சன் நெக்ஸ்ட், ஆல்ட் பாலாஜி, ஜீ5, சோனி லைவ், ஷீமாரு, ஹோய் சோய் உள்ளிட்ட சேவைகளில் தரவுகளை கண்டுகளிக்க முடியும்.

    - இலவச மொபைல் ஷீல்டு: குடும்ப உறுப்பினருக்கு ஸ்மார்ட்போன் பாதுகாப்பு சேவை வழங்கப்படுகிறது. இதில் பயனர்களின் ஸ்மார்ட்போனிற்கு ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்து வழங்கப்படுகின்றன.
    Next Story
    ×