search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இரண்டு வாரங்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்
    X

    இரண்டு வாரங்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

    ஹூவாய் நிறுவனம் இரண்டு வாரங்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #HUAWEIWatchGT



    ஹூவாய் தனது வாட்ச் ஜி.டி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் அல்ட்ரா-ஹை பேட்டரி லைஃப் வசசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் பவர்-=சேவிங் அல்காரிதம் செயல்திறன் மற்றும் எஃபிஷியன்சி மோட்களின் போது சீராக மின்சக்தியை கையாள்கிறது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் பேட்டரி பேக்கப் அதிகமாக கிடைக்கும்.

    ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED ஸ்கிரீன், டூயல்-கிரவுன் டிசைன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் செராமிக் பெசல்கள் 10.6 எம்.எம். கேசுடன் வருகிறது. இதில் ஜி.பி.எஸ்., GLONASS மற்றும் GALILEO உள்ளிட்ட நேவிகேஷன் வசதிகளை கொண்டிருக்கிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை டிராக் செய்யும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ட்ரூசீன் 3.0 இதய துடிப்பு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    ஹூவாய் வாட்ச் ஜி.டி. சிறப்பம்சங்கள்:

    - 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே, 326 PPI
    - ARM M4 பிராசஸர்
    - 16 எம்.பி. ரேம்
    - 128 எம்.பி. மெமரி
    - ப்ளூடூத் 4.1 (ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐ.ஓ.எஸ். 9.0 சாதனங்களில் இயங்கும்) 
    - 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - GPS, GLONASS, GALILEO
    - ஐ.ஆர். சார்ந்த இதய துடிப்பு மானிட்டர்
    - 420 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹூவாய் வாட்ச் ஜி.டி. ஸ்போர்ட்ஸ் எடிஷன் விலை ரூ.15,990 என்றும் கிளாசிக் எடிஷன் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை மார்ச் 19 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஹூவாய் AM61 BT ஹெட்செட் இலவசமாக வழங்கப்படுகிறது.
    Next Story
    ×