search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதிய அம்சங்களுடன் ஃபேஸ்புக் மெசன்ஜர் 4
    X

    புதிய அம்சங்களுடன் ஃபேஸ்புக் மெசன்ஜர் 4

    மெசன்ஜர் செயலியின் எளிய பதிப்பினை மெசன்ஜர் 4 என்ற பெயரில் வழங்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Messenger #Facebook



    மெசன்ஜர் செயலியின் எளிய பதிப்பை மெசன்ஜர் 4 என்ற வடிவில் வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் 10ல் 7 பேர் தங்களது மெசேஜிங் ஆப் எளிமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதன்படி புதிய மெசன்ஜரில் மூன்று டேப்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 

    மெசன்ஜர் 4ல் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டு இருப்பதால், மிக எளிமையாக செல்ஃபி எடுத்து அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். மெசன்ஜர் 4ன் பீப்பிள் டேப் கிளிக் செய்து நண்பர்களை தேடவோ, ஸ்டோரிக்களை பார்க்கவோ அல்லது யார் யார் ஆன்லைனில் உள்ளனர் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.



    இத்துடன் டிஸ்கவர் டேப் இருப்பதால், வியாபார நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு சமீபத்திய சலுகைகள், இன்ஸ்டன்ட் கேம்கள், செய்திகள் மற்றும் பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். உரையாடல்களை தனித்துவப்படுத்தும் வகையில் கலர் கிரேடியன்ட்ஸ் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்த அம்சம் கொண்டு உரையாடல்களை வெவ்வேறு நிறங்களில் பிரித்துக் கொள்ளலாம். சிவப்பு முதல் நீலம் வரையிலான நிறங்களை பார்க்க முடியும். உங்களது உரையாடல்களை உங்களது மனநிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். மெசன்ஜர் 4 படிப்படியாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

    மெசன்ஜர் 4ல் டார்க் மோட், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ஃபேஸ்புக் மேலும் அறிவித்துள்ளது.
    Next Story
    ×