search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: டெலிகாம் கோபுரம்
    X
    கோப்பு படம்: டெலிகாம் கோபுரம்

    மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வழிமுறையை மாற்ற டிராய் முடிவு

    மொபைல் போன் பயன்படுத்துவோர் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு மாற மேற்கொள்ளும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வழிமுறையை மாற்ற டிராய் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் வாடிக்கைாயளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற்றிக் கொள்ளும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (MNP) வழிமுறையை மாற்ற டிராய் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்த ஆலோசனை கடிதம் இம்மாத இறுதியில் வழங்கப்பட இருக்கிறது. இதில் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு ஏற்படும் கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் உள்ளிட்டவை எளிமையாக்கப்பட இருப்பது குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது என டிராய் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கால அவகாசம் சிலகாலம் எடுத்துக் கொள்கிறது. ஆலோசனை கடிதத்தின் படி இந்த நேரம் குறைக்கப்படுவதோடு, வழிமுறைகளும் மாற்றப்படும். இதுகுறித்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

    இதுவரை மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கட்டணம் ரூ.19 ஆக இருந்த நிலையில், இவை ரூ.4 என மாற்றியமைக்கப்பட்டது. விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கான வழிமுறைகள் மற்றும் கால அவகாசம் மாற்றப்பட இருப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


    கோப்பு படம்

    மொபைல் நம்பர் போர்டபிலிட்டி புதிய வழிமுறைகள் மற்றும் அதிக பாதுக்காப்புடன் மாற்றுவது குறித்த டெலிகாம் துறையின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள டிராய் முடிவு செய்திருக்கிறது. 

    உலகில் உள்ள மற்ற நாடுகளில் மொபைல் நம்பர் போர்ட்பிலிட்டி செய்யும் வழிமுறைகள் சில மணி நேரங்களில் நிறைவுறும் நிலையில், இந்தியாவில் இதற்கு ஏழு நாட்கள் ஆகிறது என டிராய் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய வழிமுறைகள் மிகவும் நேர்த்தியாகவும், வாடிககையாளர்களுக்கு எவ்வித பிழையும் இல்லாதபடி மேற்கொள்வதை உறுதி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

    மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் மொபைல் நம்பரை மாற்றாமல் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற முடியும்.
    Next Story
    ×