search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: ஜியோ
    X
    கோப்பு படம்: ஜியோ

    ஜியோ டி.டி.ஹெச். குறித்த முக்கிய அறிவிப்பு

    ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கப்பட்டது முதல் அந்நிறுவனம் டி.டி.ஹெச். மற்றும் இண்டர்நெட் துறைகளில் கால்பதிக்கலாம் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகின.
    மும்பை:

    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் துவங்கப்பட்டது முதல் அந்நிறுனம் இண்டர்நெட் மற்றும் டி.டி.ஹெச். சேவைகளை விரைவில் வழங்கலாம் என்றும் அதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

    ஜியோ டி.டி.ஹெச். மற்றும் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள் துவங்கப்படலாம் என்றும், இவற்றின் விலையும் ஜியோ போன்று மலிவாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டன.

    அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ டி.டி.ஹெச். என்பது ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் இது வழக்கமான டி.டி.ஹெச். சேவைகளை விட வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. மிகவும் மெல்லிய வடிவமைப்பு, அடுத்த தலைமுறை கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஜியோ டி.டி.ஹெச். சேவையை ஹெச்.டி.எம்.ஐ. தொலைகாட்சி, அமேசான் ஃபையர் ஸ்டிக் மற்றும் கூகுள் க்ரோம்காஸ்ட் போன்ற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம். அந்த வகையில் எவ்வித தொலைகாட்சியையும் ஸ்மார்ட் டிவியாக மாற்றிட முடியும். 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஜியோ டி.டி.ஹெச். செட்-டாப் பாக்ஸ் ஜியோ ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோருடன் இணைத்து ஆண்ட்ராய்டு செயலிகளை டிவியில் டவுன்லோடு செய்ய முடியும் என கூறப்பட்டது.  செட்-டாப் பாக்ஸ் இல் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

    வாய்ஸ் கமாண்ட் வசதியை சப்போர்ட் செய்ய இன்பில்ட் மைக்ரோஃபோன் கொண்டிருக்கும் என்றும், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஜியோ ஹெல்லோ உள்ளிட்டவ வசதிகளை வழங்கும் என கூறப்பட்டது.
    Next Story
    ×