search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரிலையன்ஸ் ஜியோ துவங்க முக்கிய காரணம் இவர் தானா?
    X

    ரிலையன்ஸ் ஜியோ துவங்க முக்கிய காரணம் இவர் தானா?

    இந்திய டெலிகாம் சந்தையில் மிக வேகமாக முன்னணி நிறுவனமாக உருவெடுத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ துவங்கப்பட முக்கிய காரணமாக இருந்தவர் யார் தெரியுமா?
    மும்பை:

    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ ஜியோ அறிமுகமான இரண்டு ஆண்டுகளுக்குள் உலகின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்திய டெலிகாம் சந்தையில் பெரும் மாற்றத்திற்கு வித்திட்டு, முன்னணி டெலிகாம் நிறுவனங்களையும் சேவை கட்டணங்களின் விலையை குறைக்க வைத்த ஜியோ அறிமுகமாக முக்கிய காரணமே முகேஷ் அம்பானி மகள் தானாம்.

    சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 'டிரைவர்ஸ் ஆஃப் சேஞ்ச்' எனும் விருதை பெற்ற முகேஷ் அம்பானி ஜியோ உருவாக முதல் காரணியாக இருந்தது இஷா தான் என தெரிவித்திருக்கிறார். அன்று விதைக்கப்பட்ட விதை இன்று நாட்டின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க்களில் ஒன்றாக உயர்ந்து இருக்கிறது.

    வாழ்நாள் முழுக்க இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மலிவு விலையில் மொபைல் டேட்டா உள்ளிட்டவை ஜியோவின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இத்துடன் மொபைல் டேட்டா மட்டுமின்றி வீடுகள், வியாபார மையங்கள் மற்றும் கார்களை இண்டர்நெட் உடன் இணைப்பதற்கான பணிகளை ஜியோ மேற்கொண்டு வருகிறது.

    'அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இஷா 2011-ம் ஆண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். கல்வி சார்ந்த பணிகளின் இடையே, அவர் வீட்டின் இண்டர்நெட் வேகம் படு மோசமாக உள்ளது என நொந்து கொண்டார்,' என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.



    'பிராட்பேண்ட் இண்டர்நெட் வரையறுக்கும் தொழில்நுட்பமாக இருக்கிறது, இதில் இந்தியா தனித்திருக்க முடியாது என இஷா மற்றும் ஆகாஷ் இருவரும் என்னை நம்பவைத்தனர். இந்தியாவில் அப்போது இண்டர்நெட் இணைப்பு சீரற்று இருந்ததோடு, டேட்டா விலையும் அனைவராலும் பெற முடியாத ஒன்றாக இருந்தது' என அவர் மேலும் தெரிவித்தார்.

    'ஜியோ வரவு இவை அனைத்தையும் மாற்றியமைத்து, இந்தியா முழுக்க அனைவரும் செலுத்தக் கூடிய விலையில் டேட்டா மற்றும் இதர சேவைகளை ஜியோ மூலம் வழங்குகிறோம். செப்டம்பர் 2016-இல் துவங்கப்பட்ட ஜியோ சேவை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    1ஜி மொபைல் நெட்வொர்க் வழங்கியதில் அமெரிக்க ஆதிக்கம் செலுத்த, ஐரோப்பியா 2ஜி நெட்வொர்க்கிலும், சீனா 3ஜி நெட்வொர்க் வழங்குவதில் முன்னணியில் இருந்த நிலையில், ஜியோ மூலம் 4ஜி எல்டிஇ டேட்டா நெட்வொர்க் வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதனால் 4ஜி நெட்வொர்க் வழங்குவதில் முதன்மை நாடாக இந்தியாவை மாற்றும். 



    2ஜி நெட்வொர்க் உருவாக்க ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் துறைக்கு 25 ஆண்டுகள் ஆன நிலையில், 4ஜி எல்டிஇ சேவையை வழங்க ஜியோ மூன்று ஆண்டுகளே எடுத்து கொண்டுள்ளதோடு 5ஜி தொழில்நுட்பமும் கிட்டத்தட்ட தயாராகி வருகிறது.

    இந்திய வியாபார வரலாற்றில் உண்மையான டிரைவ் ஆஃப் சேஞ்ச் திருபாய் அம்பானி தான் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். 1966-ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை வெறும் ரூ.1000 முதலீட்டில் துவங்கினார். இன்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 5000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய குழுமமாக இருக்கிறது.
    Next Story
    ×