search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: வோடபோன்
    X
    கோப்பு படம்: வோடபோன்

    ரூ.18க்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் வோடபோன்

    வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் குறுகிய சலுகையை வோடபோன் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாய் அமைந்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் துவங்கிய போட்டி நாட்டின் முன்னணி டெலிகாம் வாடிக்கையாளர்களையும் தங்கள் சேவைக்கான விலையை குறைக்க வைத்திருக்கிறது.

    போட்டியை பலப்படுத்தும் நோக்கில் வோடபோன் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.18-க்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள், பாடல்கள், கேமிங் அல்லது அதிக மெமரி கொண்ட தரவுகளை டவுன்லோடு செய்ய இந்த சலுகை தலைசிறந்ததாக இருக்கும்.

    ரீசார்ஜ் ஆக்டிவேட் ஆனதில் இருந்து ஒருமணி நேரத்திற்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படும் இந்த சலுகையில் ஒரு மணி நேரம் நிறைவுற்றதும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.



    ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.19 சலுகையில் 150 எம்.பி. அதிவேக 4ஜி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 150 எம்.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் குறைக்கப்பட்டு விடும், எனினும் நொடிக்கு 64 கே.பி. (Kbps) வேகத்தில் டேட்டா பயன்படுத்த முடியும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 20 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    அதிக டவுன்லோடு செய்வோருக்கு ஏற்ற சலுகையை வோடபோன் வழங்கும் பட்சத்தில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மேற்கொள்ள ரிலையன்ஸ் ஜியோ சலுகை பொருத்தமாக இருக்கும். டெலிகாம் சந்தையில் போட்டியை எதிர்கொள்ள வோடபோன் சமீபத்தில் தனது ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வாடிக்கையாளர்களுக்கு 50% வரை கூடுதல் டேட்டா அறிவித்தது.

    அதன்படி வோடபோனின் குறைந்த விலை சலுகையாக ரூ.399 இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய அழைப்புகள், தேசிய ரோமிங்கின் போது இலவச அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் வழங்கப்படுகிறது. 

    அதிகபட்ச சலுகை ரூ.2,999 விலையில் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 300 ஜிபி டேட்டா, 200 நிமிடங்கள் அமெரிக்கா, கனடா, ஹாங் காங், மற்றும் இதர நாடுகளுக்கு அழைப்புகள், ஒரு ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, அன்லமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    குறிப்பு: வோடபோன் அறிவித்திருக்கும் சலுகையின் விலை மற்றும் சேவைகள் ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் ஏற்ப மாறுபடும்.
    Next Story
    ×