search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: வோடபோன்
    X
    கோப்பு படம்: வோடபோன்

    பத்து லட்சம் வாடிக்கையாளர்களை கவர்ந்த வோடபோன்

    நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் சேவையை பயன்படுத்த இதுவரை சுமார் பத்து லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக வோடபோன் இருக்கிறது. அந்த வகையில் வோடபோன் சேவையை பயன்படுத்த இதுவரை மட்டும் சுமார் பத்து லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் விண்ணப்பத்து இருப்பதாக வோடபோன் அறிவித்துள்ளது.

    'இதுவரை பத்து லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் வோடபோன் சேவையில் இணைந்து கொள்ள போர்ட் செய்திருக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் வோடபோன் ரீடெயில் மையங்கள் அனைத்தும் வாரத்தின் ஏழு நாட்களும் இயங்கி வருகிறது.' என வோடபோன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வோடபோன் நெட்வொர்க்கில் தேவையான அளவு பேண்ட்வித் மற்றும் கூடுதல் திறன் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி அந்நிறுவனம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. கடுமையான நிதிச்சுமை காரணமாக ஏர்செல் சேவை தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்: டெலிகாம் கோபுரம்

    டெலிகாம் சந்தையில் நிலவும் கடுமையான போட்டி, கவர்ச்சிகர சலுகைகள் வழங்கிய புதிய நிறுவனம், சட்ட ரீதியிலான விதிமுறை மாற்றங்கள், கடுமையான கடன், அதிகரிக்கும் இழப்பு உள்ளிட்ட காரணங்களால் வியாபாரம் சரிவை சந்தித்ததோடு, பயனர்கள் வைத்திருந்த நம்பிக்கையை பாதித்து விட்டது என ஏர்செல் தெரிவித்திருந்தது. 

    முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கும் நோக்கில் இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் பேக்ட் வழங்க ஏர்செல் நிறுவனம் பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

    ஏர்செல் சேவையை தொடர்ந்து வழங்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. தற்போதைய சூழலில் ஏர்செல் சேவை தொடர்ந்து பாதிக்கப்படும் பட்சத்தில் அதன் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என அதிகளவு சுமையை அந்நிறுவனம் கூடுதலாக சந்திக்க நேரிடும்.
    Next Story
    ×