search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஸ்டர் தாக்குதல் எதிரொலி - இலங்கையில் மே தின பேரணிகள் ரத்து
    X

    ஈஸ்டர் தாக்குதல் எதிரொலி - இலங்கையில் மே தின பேரணிகள் ரத்து

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 253 உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களின் எதிரொலியாக ஆண்டுதோறும் நடைபெறும் மே தின பேரணிகள் இன்று ரத்து செய்யப்பட்டன. #NoMayDay #MayDayin #EasterSundayattacks
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளும், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளும் பொறுப்பேற்றனர்.

    இதற்கிடையில், புத்த மதத்தவர்களின் ’வேஸக்’ பண்டிகையையொட்டி மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த சில பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில், சர்வதேச உழைப்பாளர்கள் தினத்தையொட்டி இலங்கையில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் வழக்கமாக நடைபெறும்  மே தின பேரணிகள் இன்று ரத்து செய்யப்பட்டன.

    இலங்கையின் ஆளும்கட்சியான மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அந்நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் பேரணிகளுக்கு பதிலாக தங்களது அலுவலகங்கள் மற்றும் அரங்கங்களில் மே தின விழா கூட்டங்களை நடத்தி வருகின்றன. #NoMayDay #MayDayin #EasterSundayattacks
    Next Story
    ×