search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர்
    X

    இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர்

    இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய தற்கொலைப்படை பயங்கரவாதிகளுள் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. #SrilankanBlasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில்  359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 
     
    தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

    இந்நிலையில், இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் என்பதும், அவரது பெயர் அப்துல் லத்தீப் ஜமீல் மொகமது எனவும் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

    இவர் இங்கிலாந்தின் தென்கிழக்கே கடந்த 2006 -2007ம் ஆண்டு படித்தவர் என்பதும், மேற்படிப்பை ஆஸ்திரேலியாவில் முடித்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #SrilankanBlasts
    Next Story
    ×