search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணு ஆயுத ஆலைகளை மூட வடகொரியா உறுதி - அமெரிக்க தூதர் தகவல்
    X

    அணு ஆயுத ஆலைகளை மூட வடகொரியா உறுதி - அமெரிக்க தூதர் தகவல்

    நாட்டில் உள்ள அணு ஆயுத ஆலைகள் அனைத்தையும் மூட வடகொரியா உறுதி அளித்திருப்பதாக அந்த நாட்டுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் தெரிவித்தார். #NorthKorea
    வாஷிங்டன்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா.

    குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது.

    இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.

    இதற்கு தீர்வுகாண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர்.

    அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாத இறுதியில் நடக்கலாம் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் சமர்ப்பித்த உலக அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில், வடகொரியா அதன் அணு ஆயுத திட்டங்களை கைவிட விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.



    ஆனால், நாட்டில் இருக்கும் அணு ஆயுத ஆலைகள் அனைத்தையும் மூட வடகொரியா உறுதி அளித்து இருப்பதாக அந்நாட்டுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன் தெரிவித்துள்ளார்.

    கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உறையாற்றியபோது ஸ்டீபன் பீகன் இதுபற்றி கூறியதாவது:-

    வடகொரியா உடனான சிக்கலை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி டிரம்ப் தயாராக இருக்கிறார். வட கொரியாவை நாம் ஆக்கிரமிக்க போவதில்லை. அங்கு நடைபெறும் ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை.

    ஆனால், எந்த ஒரு ஒப்பந்தமும் போடுவதற்கு முன்னால், தான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் முழுப்பட்டியலை வடகொரியா வழங்கவேண்டும்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வடகொரியா சென்றபோது, நாட்டில் உள்ள அனைத்து அணு ஆயுத ஆலைகளும் மூடப்படும் என அந்நாடு உறுதி அளித்தது.

    எனினும், வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தில் நிபுணர்களின் ஆய்வு மற்றும் கண்காணிப்பு வழிமுறைகளை அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #NorthKorea
    Next Story
    ×