search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மால்டாவில் இந்திய வம்சாவளியினருடன் உரையாடினார் வெங்கையா நாயுடு
    X

    மால்டாவில் இந்திய வம்சாவளியினருடன் உரையாடினார் வெங்கையா நாயுடு

    தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினார். #VenkaiahNaidu
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
     
    முதல் கட்டமாக, செர்பியா சென்றடைந்த வெங்கையா நாயுடுவுக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், செர்பியா அதிபர் அலெக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. அப்போது இரு நாடுகளின் உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இர்நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மால்டாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புளோரியானா பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினார். அப்போது இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #VenkaiahNaidu
    Next Story
    ×