search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல்
    X

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி :

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில்  நேற்று மாலை 5 மணியளவில் காலமானார்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அண்டை நாடுகளின் தலைவர்கள் பலரும் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். விரைவில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், வாஜ்பாய் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ’அடல் பிகாரி வாஜ்பாய் இந்திய துணை கண்டத்தின் மிகப்பெரிய அரசியல் ஆளுமை, அவர் வெளியுறவு மந்திரியாக பொறுப்பு வகித்த போது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் பொறுப்பை ஏற்றார்.  இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட அவர் எடுத்த முயற்சிகள் என்றும் நினைவு கூறப்படும்’ என  தெரிவித்துள்ளார்.

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் வாஜ்பாய் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரின் நல்லாட்சி மற்றும் பிராந்திய அமைதியை மேம்படுத்திய விதம் போன்றவற்றை நினைவு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலையில் வாஜ்பாய் முக்கிய பங்காற்றியுள்ளார். இன்றைய தினம் வங்கதேச மக்களுக்கு சோகமான தினம் என தனது இரங்கல் குறிப்பில் ஹசினா குறிப்பிட்டுள்ளார்.



    ’முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவினால் சிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது. அவரது உறவினர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே கூறியுள்ளார்.

    ’இந்திய மக்களுக்காக தன்னலமற்ற சேவை புரிந்ததற்காக நினைவு கூறப்படும் வாஜ்பாய், நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய தொலைநோக்கு பார்வை கொண்ட ராஜதந்திரியாவார்’ என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி வாஜ்பாய்க்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இந்தியாவிற்கான ரஷியா, ஜப்பான், அமெரிக்கா
    பிரிட்டன் மற்றும் சீன தூதர்களும் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  #AtalBihariVajpayee #RIPVajpayee
    Next Story
    ×