search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் தேர்தல் முடிவை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு
    X

    பாகிஸ்தானில் தேர்தல் முடிவை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு

    பாகிஸ்தானில் தேர்தல் முடிவை ஏற்க முடியாது என அங்குள்ள எதிர்க்கட்சிகள் மறுத்துள்ளன. #PakistanElection #ShehbazSharif

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் எந்த கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்க வில்லை.

    தேர்தல் நடந்த 270 தொகுதிகளில் 118 இடங்களை பிடித்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

    எனவே இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல் முடிவை ஏற்க முடியாது என அங்குள்ள எதிர்க்கட்சிகள் மறுத்துள்ளன. தேர்தல் முடிவு குறித்து விவாதிக்க நேற்று இஸ்லாமாபாத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது.

    அதில் நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி கலந்து கொண்டது. அக்கட்சியின் தலைவரும், நவாஸ் செரீப்பின் தம்பியுமான ஷெபாஸ் செரீப் பங்கேற்றார்.

    மேலும் இந்த தேர்தலில் மிகவும் பாதிக்கப்பட்ட சிறிய கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஒளிவுமறைவற்ற முறையில் நேர்மையான விதத்தில் மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    அப்போது, “நடந்து முடிந்தது தேர்தல் அல்ல. தேர்ந்தெடுத்தல் நடந்துள்ளது. தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்படவில்லை. மக்களின் தீர்ப்பு இம்ரான்கான் கட்சியினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மக்கள் வெற்றியை தரவில்லை.

    இந்த கோரிக்கைகாக நாடு முழுவதும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர். கூட்டம் முடிந்ததும் ஜாமியத் உலெமி-இ- இஸ்லாம் பாசல் கட்சி தலைவர் மவுலானா பசுலூர் ரகுமான் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஆகவே மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக நாடு முழுவதும் போராட்டம் நடத்த போகிறோம்” என்றார்.

    இதற்கிடையே ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நவாஸ்செரீப் கூறும் போது, “தேர்தல் திருடப்பட்டு விட்டது. பாராளுமன்றத்தை தங்களது கட்சி புறக்கணிக்குமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

    Next Story
    ×