search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயர் பெற்ற மகாதிர் முகம்மது பதவியேற்றுக் கொண்டார்
    X

    உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயர் பெற்ற மகாதிர் முகம்மது பதவியேற்றுக் கொண்டார்

    மலேசிய பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றியடைந்ததையடுத்து அதன் தலைவர் மகாதிர் முகமது பிரதமராக இன்று பதவியேற்றார். #MahathirMohamed #Malaysia
    கோலாலம்பூர்:

    222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    வாக்கு எண்ணிக்கையில் முதலில் ஆளுங்கட்சி முன்னிலை பெற்றாலும், திடீரென யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. இறுதியாக ஆட்சியமைக்க தேவையான பெரும்பாண்மையை தாண்டி எதிர்க்கட்சி கூட்டணி வென்றது.



    சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதனை அடுத்து, புதிய பிரதமராக மகாதிர் முகமது இன்று பதவியேற்றார். மலேசிய நாட்டின் பாரம்பரிய உடையணிந்தபடி, மலேசிய அரண்மனையில் மகாதிர் பதவியேற்றார்.

    மேலும், 92 வயதான இவர், உலகின் மிக வயதான பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. #Malaysia #MahathirMohamed
    Next Story
    ×