search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா செல்வதற்கான எச்-1பி விசா விண்ணப்பம் ஏப்ரல் 2-ந்தேதி முதல் விநியோகம்
    X

    அமெரிக்கா செல்வதற்கான எச்-1பி விசா விண்ணப்பம் ஏப்ரல் 2-ந்தேதி முதல் விநியோகம்

    அமெரிக்கா செல்வதற்கான எச்-1பி விசா விண்ணப்ப மனு வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது.#H1Bvisa

    வாஷிங்டன்:

    எச்-1பி விசா என்பது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டினருக்குரியது. இதை வைத்து அங்கு நிரந்தரமாக குடியேற முடியாது. பணிக்காலம் முடிந்ததும் அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டும்.

    இந்த விசாவை பயன்படுத்தி தொழில் நுட்ப நிறுவனங்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஐ.டி. ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளன.

    இந்த நிலையில், அமெரிக்கா செல்வதற்கான எச்-1பி விசா விண்ணப்ப மனு வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது.

    அதே நேரத்தில் அனைத்து எச்-1 பி விசாவுக்கான பிரீமியம் விண்ணப்பம் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். மேலும் 2019-ம் ஆண்டுக்கான எச்-1 பி விசா மனு தாக்கல் வருகிற அக்டோபர் 1-ந்தேதி தொடங்கும்.

    இந்த தகவலை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. #H1Bvisa #tamilnews

    Next Story
    ×