search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டியில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி இருக்கும் காட்சி.
    X
    கும்மிடிப்பூண்டியில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி இருக்கும் காட்சி.

    மதுராந்தகம், கும்மிடிப்பூண்டி அருகே கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு

    மதுராந்தகம் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். வாக்களிக்க கிராம மக்கள் யாரும் வராததால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. #Loksabhaelections2019
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரும்பு தாது உருக்கு தொழிற்சாலையை மீண்டும் மூடக்கோரி போராட்டம் நடத்தினர். வீடுகளில் கருப்புகொடி ஏற்றுவது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலையை மூடாததால் தேர்தலை புறக்கணிக்க அக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.

    அந்த கிராமத்தில் 537 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வாக்கு சாவடி எண்.52-ல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    ஆனால் வாக்களிக்க கிராம மக்கள் யாரும் வராததால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. பூத் ஏஜெண்டுகளும் வரவில்லை.

    இதையடுத்து டி.எஸ்.பி. கல்பனா மற்றும் போலீசார் நாகராஜ் கண்டிகை கிராமத்துக்கு சென்று பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.

    மதுராந்தகத்தை அடுத்த கே.கே.புதூர் கிராமத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை அழிக்கும் தொழிற் சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அதை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலையை மூடக்கோரி கே.கே.புதூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அந்த கிராமத்தில் 1800 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்களிக்க கிராம மக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. #Loksabhaelections2019
    Next Story
    ×