search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனாம்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மால்களுக்கு செல்ல வேன் வசதி
    X

    தேனாம்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மால்களுக்கு செல்ல வேன் வசதி

    மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக வார இறுதி நாட்களில் பல்வேறு மால்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு வேன் வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடங்குகிறது. #MetroTrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

    மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக வார இறுதி நாட்களில் பல்வேறு மால்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு வேன் வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடங்குகிறது.

    தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., ஆலந்தூர் ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு வேன்கள் இயக்கப்பட உள்ளது. அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், வேளச்சேரி பீனிக்ஸ்மால் ஆகிய பகுதிகளுக்கு வேன் (டெம்போ டிராவலர்) வசதி செய்யப்படுகிறது. வார இறுதி நாட்களில் பயணிகள் பொழுதுபோக்குவதற்கு இது வசதியாக அமையும்.

    ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து போரூர் சரவணா ஸ்டோர் செல்வதற்கு சிறப்பு வேன் வசதி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தொடங்கப்படுகிறது. ரூ. 15 முதல் ரூ. 20 வரை கட்டணம் செலுத்தி இந்த வேன்களில் பயணம் செய்யலாம்.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளை வழங்கி வருகிறது. மெட்ரோ ரெயில் பயணிகள் ஷாப்பிங் மால்களுக்கு எளிதில் செல்ல மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து டெம்போ டிராவலர் வேன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. ரூ. 15 முதல் 20 வரை கட்டணம் செலுத்து இதில் பயணம் செய்யலாம்.

    தேனாம்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
    அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், வேளச்சேரி பீனிக்ஸ் மால், போரூர் சரவணா ஸ்டோர் பகுதிகளுக்கு சிறப்பு வேன் வசதி செய்யப்படுகிறது. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இந்த வேன் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain

    Next Story
    ×