search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் - கலெக்டர் வீடுவீடாக ஆய்வு
    X

    திருவள்ளூரில் 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் - கலெக்டர் வீடுவீடாக ஆய்வு

    திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சுகாதாரத்தை பேணிக்காப்பது குறித்து அறிவுறுத்தினார். #Denguefever
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர். பல்வேறு இடங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டது.

    கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டனர்.

    தற்போது திருவள்ளூர் வள்ளலார் நகர் தெருவைச் சேர்ந்த சர்மிலி (11), பேரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன்(12), மணவாளநகர் பகுதியை சேர்ந்த சரண் (6) உள்ளிட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் ‌ஷர்மிலி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும், மற்ற 2 பேரும் திருவள்ளூர் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு ராஜ வீதி, பெரிய குப்பம் பஜார் வீதி உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து பொது மக்களுக்கு டெங்குகொசுக்களை ஒழிப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து சுகாதாரத்தை பேணிக்காப்பது குறித்தும் அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

    நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் உள்ள குடிநீரில் குளோரின் அளவுகளை ஆய்வு செய்தார், வீடு வீடாக சென்று குடிநீரில் டெங்கு கொசு உற்பத்தி புழுக்கள் உள்ளதா என்றும் வெட்டவெளிகளில் கிடக்கும் டயர் மற்றும் தேங்காய் தொட்டிகளை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் வேல்முருகன், வட்டாட்சியர் தமிழ்செல்வன், நகராட்சி ஆணையர் முருகேசன், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்த ராஜ், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், சுகாதார துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #Denguefever

    Next Story
    ×