search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட சாமிதுரை.
    X
    கைது செய்யப்பட்ட சாமிதுரை.

    கள்ளக்குறிச்சி அருகே கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு- வாலிபர் கைது

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே போலீசார் நடத்திய வேட்டையில் கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் போலீசாருக்கு நாககுப்பம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் அங்கிருந்து ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நாககுப்பம் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்கிற துரை (வயது 36) என்பதும், நாககுப்பம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் கொல்லப்பட்டறை நடத்தி வருவதும், அங்கு வைத்து ரகசியமாக கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வருவதும், அங்கு நாட்டுத் துப்பாக்கி தயார் செய்து விற்பனை செய்வதும், அதனை பழுது நீக்கி கொடுப்பதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து சாமித்துரையின் கொல்லுப்பட்டறைக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சாமி துரையை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சாமிதுரை மீது நாட்டுத் துப்பாக்கிகள் தயார் செய்வது தொடர்பாக சின்னச்சேலம் மற்றும் சுற்றுப்புற பகுதி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×