search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இன்று சூரியனை சுற்றி அதிசய வட்டம் - பொதுமக்கள் வியப்பு
    X

    சேலத்தில் இன்று சூரியனை சுற்றி அதிசய வட்டம் - பொதுமக்கள் வியப்பு

    சேலத்தில் இன்று சூரியனை சுற்றி திடீர் அதிசய வட்டம் ஏற்பட்டது. இந்த அரிய காட்சியினை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று 96 டிகிரி வெயில் அடித்தது. இதனால் இரவு நேரங்களில் கடுமையான புழுக்கம் நிலவியது. பேன் மற்றும் ஏ.சி. இல்லாமல் பொதுமக்களால் தூங்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று பகல் சேலத்தில் சூரியனை சுற்றி திடீர் அதிசய வட்டம் ஏற்பட்டது. சூரியனை சுற்றி வானவில் போன்ற கலரில் இந்த சூரிய வட்டம் இருந்தது. இது சிலமணி நேரம் நீடித்தது.

    இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். நீண்ட நேரம் அந்த ஒளியை பார்க்க முடிய வில்லை. அந்த அளவுக்கு சூரியனை சுற்றி தோன்றிய ஒளி கண்களை கூச வைத்தது.

    இந்த அரிய காட்சியினை பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்தனர். இதை வாட்ஸ்-அப் மூலமும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    எதற்காக இந்த அதிசய ஒளி வட்டம் தோன்றியது என்று தெரியவில்லை.

    Next Story
    ×